• Sep 21 2024

பிக்பாஸ் வீட்டில் கலங்கி அழுத கூல் சுரேஷ்! மனம் வருந்தி நிற்கும் கமல்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 


இன்றைய தினம் பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுடன் தீபாவளி கொண்டாட்டத்தில் இணைந்து கொண்ட கமல், அவர்களுக்கு அனுப்பப்பட்ட வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ளார்.

இவ்வாறான நிலையில், ஒவ்வொருவரும் தமக்கு வீட்டில் இருந்து அனுப்பப்பட்ட தீபாவளி வாழ்த்தை வாசித்து மகிழ்ச்சி அடைகின்றனர். இதன் போது கூல் சுரேஷ் மட்டும் தனக்கு அனுப்பப்பட்ட வாழ்த்தை வாசிக்கும் போதே கண்கலங்கி அழுகின்றார்.


Advertisement

Advertisement