• Jan 15 2025

சுதந்திர தினத்தில் 'ஜவான்' பட நடிகை பகிர்ந்த பதிவால் சர்ச்சை !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

இந்தியா தனது 78வது சுதந்திர தினத்தை கொண்டாடிக்கொண்டிருக்கும் இன்றைய நாளில் நடிகை ரிதி தோக்ரா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அண்மையில் கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை மேற்கோள் காட்டி குறித்த நடிகை பகிர்ந்த பதிவால் ஓர் சர்ச்சை வெடித்துள்ளது.


அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கானின் வளர்ப்பு தாயாக வரும் ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை ரிதி தோக்ரா சற்று முன் தனது இன்ஸ்டா பக்கத்தில் "பாலியல் வன்கொடுமை என்பது தேசிய பிரச்சனையாகாத வரை பெண்களுக்கு இந்த நாட்டில் சுதந்திரம் இல்லை" என பதிவொன்றை இட்டுள்ளார்.


கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இன்றைய தினம் குறித்த பதிவை பகிர்ந்திருக்கும் ரிதி தோக்ராவுக்கு சார்பான மற்றும் எதிரான கருத்துக்கள் தற்போது சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது.தனது சுயவிளம்பரத்திற்காக இப் பதிவை இட்டுள்ளார் என அவர் மீது குற்றம் சுமத்தப்படுகிறது.

Ridhi Dogra on Playing Older Character in Jawan: It Would Have Been Crazy  to Let Go | - Times of India

கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து கொண்டிருந்த மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் சம்பவம் நாட்டையே அதிர வைத்தது.தற்போது இந்த வழக்கை சிபிஐ ஏற்று நடத்தி வருகிறது எனபது இங்கு குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement