• Apr 28 2024

டான்ஸில் மாஸ்டர் ஜானியையே மிஞ்சிய தளபதி விஜய்- ஜாலியோ ஜிம்கானா பாடலின் அசத்தலான மேக்கிங் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாது பாடகராகவும் நடன கலைஞராகவும் வலம் வருபவர் தான் நடிகர் விஜய். இவர் தற்பொழுது இயக்குநர் வம்சி இயக்கத்தில் தனது 66 வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் இவருடன் இணைந்து பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றது.

எந்தப் படமாக இருந்தாலும் அதில் இவருடைய நடனத்தைப் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் அனைவரும் மிகவும் ஆவலாக இருப்பார்கள். இப்படத்தின்ஒவ்வொரு படத்திலும் வித விதமான கஷ்டமான ஸ்டெப்புகளை அழகாக ஆடி அசத்தி வருகிறார்.

அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் தான் பீஸ்ட். இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் தான். அதில் ஜாலியோ ஜிம்கானா பாடலையும் ஹலமதி ஹபிபோ பாடலையும் பார்த்து ரசிக்காதவர்களே இல்லை எனலாம்.

https://twitter.com/PeaceBrwVJ/status/1541063352343859200

இதில் விஜய் சூப்பராக நடனமாடி இருப்பார். இந்நிலையில், சமீபத்தில் வெளியான ஜாலியோ ஜிம்கானா மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் டான்ஸ் மாஸ்டர் ஜானியையே நடிகர் விஜய் தண்ணி குடிக்க வைத்த தருணத்தை ரசிகர்கள் நோட் பண்ணி டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement