விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நாஞ்சில் விஜயன் சமூக வலைத்தளத்திலும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி கொண்டிருப்பவர் தான். சமீபத்தில் தான் இவர் ஜெயிலுக்கு சென்று வந்திருந்தார்.
விஜய் டிவியில் பல ஷோக்களில் பெண் கெட்டப் போட்டு வந்திருப்பார்.குறிப்பாக அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள். தற்போது அவருக்கு சின்னத்திரையில் வாய்ப்புகள் குறைந்ததால் சொந்தமாக youtube சேனல் நடத்தி வருகிறார்.
தற்போது நாஞ்சில் விஜயனுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.அவருக்கு தற்போது ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் இவர் தனது வருங்கால மனைவி யார் என்பதை மட்டும் குறிப்பிடவில்லை என்பதும் முக்கியமாகும்.
Listen News!