• Jan 19 2025

பிசினஸ் விளம்பரமா? பெண்கள் மேல் உண்மையான அக்கறையா? நயன்தாராவின் மாதவிடாய் பதிவு..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் சரியான மாதவிடாய் சுழல் ஏற்பட இதனை பின்பற்றுங்கள் என்று கூறியிருப்பதை அடுத்து அவர் தன்னுடைய தயாரிப்பை விளம்பரப்படுத்துகிறாரா? அல்லது உண்மையிலேயே பெண்களுக்கான பயனுள்ள பதிவை செய்துள்ளாரா? என்ற கேள்வியை பலர் எழுப்பி வருகின்றனர்.

நடிகை நயன்தாரா கடந்த சில மாதங்களுக்கு முன் பெமி9 என்ற நிறுவனத்தை ஆரம்பித்து அதில் பெண்களுக்கு தேவையான சில பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தப்படும் தனது தயாரிப்பு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை நயன்தாரா பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் ’ஒவ்வொரு பெண்ணும் மாதவிடாய் நேரத்தில் கடக்க வேண்டிய பல நிலைகள் இருக்கும்.  அந்த நேரத்தில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவதால் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளும் அதிகம் இருக்கும். அந்த நேரத்தில் நேசிப்பதற்கும் ஆறுதல்படுத்துவதற்கும் பெண்கள் ஏங்குவார்கள்.

மாதவிடாய் காலத்தில் நான் பெமி9  பயன்படுத்தி நல்ல பலன் கண்டேன், உங்களுக்கும் அதை பரிந்துரை செய்கிறேன், இது என்னுடைய தயாரிப்பு தான், ஆனால் அதற்காக மட்டும் நான் இதை கூறவில்லை, நான்  அனுபவித்த சௌகரியங்கள் உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக சொல்கிறேன்.

பெண்களுக்கு பிரச்சனை இல்லாத சௌகரியமான மாதவிடாய் சூழல் அமைய இந்த தயாரிப்பு பயனுள்ளதாக இருக்கும். மாதவிடாய் காலத்திலும் மற்ற நாட்கள் போலவே மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இருக்கலாம்’ என்று கூறியுள்ளார்.

நயன்தாராவின் இந்த பதிவுக்கு ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது. நடிகை நயன்தாரா மாதவிடாய் காலத்தில் அனைத்து பெண்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த பதிவை செய்தாரா? அல்லது அவர் தன்னுடைய தயாரிப்பு விற்பனை அதிகரிக்க இந்த பதிவு செய்தாரா? என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.



Advertisement

Advertisement