• May 20 2024

சிவகார்த்திகேயனுக்கு பெரியப்பாவாக நடிக்க ஓகே சொன்ன காமெடி நடிகர் கவுண்டமணி

stella / 1 year ago

Advertisement

Listen News!

1977ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கமல்ஹாசன்,மற்றும் ரஜினிகாந்த் நடித்த 16 வயதினிலே படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் கவுண்டமணி. இதனைத் தொடர்ந்து கரகாட்டக்காரன், வைதேகி காத்திருந்தால், கன்னி ராசி, நடிகன், மன்னன், சூரியன், ஜென்டில்மேன், மன்மதன் என ஏகப்பட்ட படங்களில் நகைச்சுவையில் கலக்கி வந்தவர்.

மேலும் 80 மற்றும் 90களில் கவுண்டமணி - செந்தில் காம்பினேஷன் இல்லாத படங்களே இல்லை எனலாம்.கடைசியாக 49 ஓ, எனக்கு வாய்த்த அடிமைகள் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார்.தற்பொழுது சினிமாவில் நடிக்காமல் சில காலமாகவே ஓய்வில் இருந்து வருகிறார்.

எப்போதாவது சில திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளும் கவுண்டமணியை சமீபத்தில் அவரது இல்லத்திற்கே சென்று சந்தித்து நீண்ட நேரம் பேசியிருக்கிறார் சிவகார்த்திகேயன். நடிகர் சிவகார்த்திகேயனும் தீவிர கவுண்டமணி ரசிகர் தான். இந்நிலையில், அந்த சந்திப்புக்கு இன்னொரு முக்கிய காரணமும் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன

சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் அவருக்கு பெரியப்பாவாக நடிக்க நடிகர் கவுண்டமணியை அணுகி உள்ளதாகவும், அதற்கான சந்திப்பு தான் சமீபத்தில் நடைபெற்றதாகவும் தற்போது தகவல்கள் லீக்காகி உள்ளன. இதற்காக கவுண்டமணியிடம் ஓகேவும் வாங்கி விட்டாராம்.

அவுட்டோர் படப்பிடிப்பு இருக்கக் கூடாது, தனக்கான போர்ஷன்களை 25 நாட்களுக்குள் முடித்து விட வேண்டும், இரவு நேர படப்பிடிப்பு வைக்கக் கூடாது உள்ளிட்ட சில கண்டிஷன்களை கவுண்டமணி போட அனைத்துக்கும் ஓகே சொல்லி இருக்கிறாராம் சிவகார்த்திகேயன். மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள மாவீரன் படத்தில் இந்த காம்பினேஷன் இருக்கப் போகிறதா? அல்லது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - கவுண்டமணி கலக்கப் போகிறார்களா? என்பது விரைவில் தெரிந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement