• May 08 2024

முன்னணி நடிகர்களை போஃலோ பண்ணும் அருள் சரவணன்- கடும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான அருள் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் 'தி லெஜண்ட். இப்படத்தை J. D.- Jerry இயக்கியுள்ளனர்,மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள பாடல்கள் அனைத்தும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி யூடியூப்பில் மில்லயன் கணக்கில் பார்வைகளை குவித்து சாதனை படைத்திருந்தது.அத்தோடு இப்படம் ஜூலை 28 ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

இப்படத்தை பான் இந்தியளவில் ரீலிஸாகும் என அறிவித்துள்ளனர். ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட டாப் நடிகர்களை போல தற்போது லெஜண்ட் சரவணனும் தனது திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிடவுள்ளாராம்.

இவர் தனது முதல் படத்தையே இவ்வளவு பிரமாண்டமாக வெளியிடவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது எனலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement