• Apr 01 2025

நடிகர் சூர்யா-ஜோதிகா வீட்டில் ஒன்று கூடிய சினிமா பிரபலங்கள்..!

Mathumitha / 2 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி ஜோடியாக வலம் வருபவர்கள் தான் சூர்யா -ஜோதிகா பல படங்களில் இணைந்து நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் தியா ,தேவ் எனும் இரண்டு பிள்ளைகள் உண்டு ஒரு சில காரணங்களினால் சென்னையில் இருந்து மும்பைக்கு சென்று தங்கியுள்ளனர்.


ஜோதிகா தற்போது பல படங்களில் நடித்து வருகின்றார். மேலும் ஒரு தெலுங்கு வெப் சீரியலிலும் நடித்து வருகின்றார். மேலும் சூர்யாவும் கங்குவா படத்தினை தொடர்ந்து "ரெட்ரோ " ,"சூர்யா 45", " வாடிவாசல் " போன்ற படங்களில் நடித்து வருகின்றார்.


இந்த நிலையில் இன்று சூர்யா ஜோதிகா இருவரும் தங்களது வீட்டில் சினிமா பிரபல ஹீரோயின்களை அழைத்து பார்ட்டி பண்ணியுள்ளனர். குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் இந்த பார்ட்டியில் திரிஷா ,ரம்யா கிருஷ்ணன் ,ராதிகா ,திவ்யதர்ஷினி ,ரம்யா மற்றும் பலர் கலந்து சிறப்பித்துள்ளனர் . மேலும் ஜோதிகா இதன் போது எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார் .


Advertisement

Advertisement