தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் தனது வித்தியாசமான கதைக்களங்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றார். அந்தவகையில் அந்நடிகர் பற்றிய தகவல்கள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு எப்பொழுதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் மாஸான கூட்டணியாக ஹீரோ மற்றும் இசையமைப்பாளர் கூட்டணி விளங்குகின்றது. அதில் மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாக தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணி காணப்படுகின்றது. சமீப காலமாக இவர்கள் இருவரும் தனித்தனியாகப் பிஸியாக இருப்பதால், இவர்களது கூட்டணி மீண்டும் இணையுமா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்து வருகின்றது.
அத்துடன் 2012ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படத்தின் மூலமே அனிருத் திரையுலகிற்கு அறிமுகமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தனுஷின் அடுத்த படத்தில் அனிருத் இணைந்து கொள்வார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் இருவரும் இணைந்து கொண்டால் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் எனவும் கருதப்படுகின்றது.
Listen News!