• Jan 18 2025

சரத்குமார் முன்னாள் மனைவிக்கு நடிப்பு சொல்லி கொடுத்தவர் .. ஒன் டேக் நடிகைன்னு பெயர் வாங்கியவர்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!


சரத்குமாரின் முன்னாள் மனைவி சாயாதேவி என்பவர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும்வணங்கான்என்ற திரைப்படத்தில் நடித்திருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியாகிய நிலையில் தற்போது அவரே அந்த தகவலை உறுதி செய்து அந்த படத்தில் நடித்த தனது அனுபவம் குறித்து பேட்டியளித்துள்ளார்.

சரத்குமாரின் முதல் மனைவி சாயாதேவி தனது மகள் வரலட்சுமியின் சில சமூக சேவை அமைப்புகளை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு பாலா இயக்கத்தில் உருவாகி வரும்வணங்கான்என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் அவர் அம்மா வேத்தில் நடித்திருப்பதாகவும் ஒரு சில நிமிடங்கள் மட்டும் வரும் காட்சியாக இருந்தாலும் அவரது கேரக்டர் சூப்பராக இருக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.




இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த சாயாதேவி தனது குடும்ப நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவணங்கான்படத்தில் நடித்ததாகவும் அந்த படத்தில் தனது கேரக்டரை கேட்டதும் அந்த கேரக்டரை விட எனக்கு மனதில்லை என்றும் அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்றும் கூறினார்.


ஆனால் அதே நேரத்தில் தனக்கு நடிப்பு அனுபவம் இல்லாததால் இல்லாததால் சிறிது யோசித்ததாகவும் ஆனால் என் மகள் வரலட்சுமி தான்நான் இருக்கும்போது ஏன் கவலைப்படுகிறீர்கள், நான் உங்களுக்கு நடிப்பு சொல்லி தருகிறேன் என்று தைரியம் கொடுத்தார் என்றும் ஒன் டேக் நடிகை என்ற பெயர் வாங்கிய எனது மகள் தான் எனக்கு பல நடிப்பு டிப்ஸ்களை சொல்லி கொடுத்தார் என்றும் என் மகளிடம் டிப்ஸ் வாங்கி நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார்.

இந்த படத்தின் கதை, இந்த படத்தில் எனது கேரக்டர் ஆகியவற்றை இப்போது என்னால் சொல்ல முடியாது, ஆனாலும் எனது கேரக்டர் சிறிது நேரமே வந்தாலும் அருமையாக இருக்கும், இந்த படத்தின் கதையும் இதுவரை வெளி வராத ஒரு வித்தியாசமான கதைஎன்றும் அவர் அந்த பேட்டியில் கூறினார்.

 

Advertisement

Advertisement