கடந்த வாரம் 12ம் திகதி பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படங்களில் ஒன்றுதான் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம்.
கேப்டன் மில்லர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும், எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், கேப்டன் மில்லர் திரைப்படத்தின் கதை திருட்டு விவகாரத்தில் சிக்கியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி கேப்டன் மில்லர் படத்தின் கதை திருட்டு என பிரபல இயக்குநர் கீரா தனது முகநூலில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறும் போது, தமிழ் திரைத் துறையை சார்ந்த இயக்குனர்கள் தற்போது தான் கொஞ்சம் வாசிப்பு பக்கம் திரும்பி உள்ளார்கள். புதிய நூல்களை தேடி தேடி வாங்குவதையும், வாசிப்பதையும் பார்க்க முடிகிறது. வாசிப்பு என்பது தங்களது அறிவையும் கலை, கலாச்சாரத்தையும் புரிந்து கொண்டு புதிய படைப்பாக இருக்க வேண்டும். அப்படி தான் பலரும் இருக்கின்றார்கள்.
ஆனால் சிலர் அப்படியே காப்பி அடித்து பணம் சம்பாதிக்க துடிக்கின்றனர். இந்த போக்கு சரியானது அல்ல. ஒரு படைப்பாளரின் படைப்பை திருடுவது ஒரு முட்டாள்தனமாக தான் இருக்க முடியும் அல்லவா? கேப்டன் மில்லர் திரைப்படம் எழுத்தாளர் வேலராமமூர்த்தி எழுதி, டிஸ்கவரி வெளியிட்டுள்ள பட்டத்து யானை நாவளின் அப்பட்டமான திருடாக இருப்பது மன்னிக்க முடியாத குற்றம். இதற்கு படைப்பாளர்கள் குரல் கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பிரபல நடிகர் வேல ராமமூர்த்தி எழுதிய பட்டத்து யானை நாவலின் கதை தான் கேப்டன் மில்லர் என புகார் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!