பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் இன்றைய நாள் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த முறை பிக்பாஸ் வீட்டுக்குள் நடிகர் விஜய் சேதுபதி சென்றுள்ளார். எதற்க்காக சென்றார் என்பது குறித்து பார்ப்போம்.
பிக்பாஸ் சீசன் 85 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. 18 பேர் உள்ளே இருந்த நிலையில் மேலும் 6 பேர் வையில் கார்ட் ஏரியாக வந்தனர். ஆனால் தற்போது 9 பேர்தான் இருக்கிறார்கள். இந்த வாரம் டிக்கெட் டூ பின்னாலே வாரமாக ஒளிபரப்பாகி வந்தது. கடுமையான டாஸ்குகள் வழங்கப்பட்ட நிலையில் அதில் வையில் கார்ட் போட்டியாளராக வந்த ரயான் முன்னிலை வகித்து பிக்பாஸ் சீசன் 8 டிக்கெட் டூ பின்னாலே போட்டியாளராக மாறினார்.
இந்நிலையில் வெளியாகிய ப்ரோமோவில் விஜய் சேதுபதி பிக்பாஸ் வீட்டுக்கு சென்று போட்டியாளர்கள் முன்னிலையில் ரயானுக்கு டிக்கெட் டூ பின்னாலே கார்ட் கொடுத்தார். மேலும் இந்த "வாரம் நீங்க போட்ட உழைப்புக்கு தான் இந்த பரிசு, டேரெக்டா பைனலுக்கு போயாச்சு வாழ்த்துக்கள்" என்று கூறினார்.
மேலும் ரயான் சந்தோசத்தில் "ரொம்ப நன்றி சார் நான் தான் கடைசி போட்டியாளராக இந்த வீட்டுக்கு வந்தேன் இப்ப முதல் போட்டியாளராக பைனலுக்கு போறேன்" என்று கூறினார். விஜய் சேதுபதி " கடைசியா வந்து முதல்ல போறீங்க மற்ற எல்லாருக்கும் வாய்ப்பு இருக்கு நல்லா விளையாடுங்க" என்று கூறினார். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது.
Listen News!