• Jan 18 2025

'பருந்தின் டோப்பா கிழிக்கப்பட்டது' ரஜினியை பங்கமாக அசிங்கப்படுத்திய ப்ளூ சட்டை மாறன்!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தின் வெற்றி விழா, நேரு ஸ்டேடியத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.  

இந்த நிலையில், லியோ வெற்றி விழாவில் குட்டி ஸ்டோரி சொல்லிய விஜய்யின் கருத்தை வைத்து ரஜினியை பங்கமாக கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

லியோ சக்ஸஸ் வெற்றி விழா நேற்றைய தினம் பல்வேறு பிரபலங்களுடன் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் விஜய், த்ரிஷா, லோகேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 


லியோ வெற்றி விழாவில் இறுதியாக பேசிய விஜய், குட்டி ஸ்டோரி ஒன்றை சொல்லியுள்ளார். குறித்த கதை ரஜினிக்கு பதிலடியா? என தனது டிவிட்டரில் 'பருந்தின் டோப்பா கிழிக்கப்பட்டது' என ரஜினியை பங்கமாக கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.


அதன்படி விஜய் கூறிய குட்டி ஸ்டோரி,  'ஒரு காட்டுல யானை, புலி, மான், காக்கா, கழுகுன்னு நிறைய மிருகங்கள் இருந்துச்சு. காட்டுக்கு இரண்டு பேர் வேட்டைக்கு போனாங்க. ஒருத்தர் வில் அம்போட போய் முயல பிடிச்சிட்டு வந்தாரு.' 'இன்னொருத்தர் ஈட்டியோட போய் யானைக்கு குறி வச்சு ஒன்னும் இல்லாம வந்தாரு. இதுல யார் வெற்றியாளர்? நிச்சயமா யானைக்கு குறி வச்சவர்தான் வெற்றியாளர். எப்பவும் பெரிய விஷயக்களுக்கு கனவு காணுங்க.' என விஜய் தனது குட்டி ஸ்டோரியில் சில ட்வீஸ்ட் வைத்து முடித்தார். 

இதனை வைத்தே ரஜினியை பங்கம் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். இதேவேளை, லியோ வெற்றி விழா தொடர்பான செய்திகள் இணையதளத்தை ஆக்கிரமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement