கோலிவுட் சினிமாவில் அசைக்க முடியாத திரைப் பிரபலங்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் ஆகியோர் காணப்படுகின்றார்கள். கிட்டத்தட்ட 50 வருடங்களை கடந்தும் இவர்களுடைய திரை உலகப் பயணம் இன்றளவில் மட்டும் தொடர்ந்து வருகின்றது.
உலகநாயகன் கமலஹாசன் தற்போது தக்லைப் படத்தில் நடித்து வருகின்றார். மேலும் கல்கி ஏடி 28 98, அன்பறிவு இயக்கும் படம் ஆகியவையும் இவருடைய கைவசம் உள்ளன. அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூலி படத்தில் நடித்து வருகின்றார். இவர்கள் இருவருமே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக காணப்படுகின்றார்கள்.
d_i_a
இந்த நிலையில், பிரபல பத்திரிக்கையாளரும் சினிமா விமர்சகருமான வலைப்பேச்சு அந்தணன், கமல் சார் எப்படி நடிச்சாலும் மக்கள் ஏத்துப்பாங்க.. ஆனால் ரஜினிக்கு அப்படி இல்லை என தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி வழங்கியுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், கமலஹாசன் நடிக்கும் படங்கள் எப்படி இருந்தாலும் மக்கள் அவரை அந்த கேரக்டரில் ஏற்றுக் கொள்வார்கள். உதாரணமாக தசாவதாரம் படத்தில் அதிரடி ஆக்சனுடன் காணப்படுவார். ஆனால் இன்னும் சில படங்கள் குடும்பப்பாங்கான அழுது ஒப்பாரி வைக்கும் படங்களாகவும் காணப்படும். ஆனாலும் அவற்றை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். இவர் ஒரு பிம்பம் இல்லாத நடிகராக திகழுகிறார்.
ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அப்படி இல்லை. அவர் காலா என்ற ஒரு படம் நடிச்சார். அந்த படம் பெயிலியர் ஆனது. அதுல அவருடைய மொத்த இமேஜ்மே காலி ஆயிற்று. அதற்கு முக்கிய காரணம் அந்த படத்தில் கான்ஸ்டபிள் ஒருவர் ரஜினியை அடிப்பது போன்ற காட்சி வரும். இதனை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்த ஒரு காரணத்தினாலே காலா படம் தோல்வியானது.
இந்த படத்தோடு அவருடைய மொத்த இமேஜ்மே காலி ஆனது. அதற்கு பிறகு தான் விட்ட இடத்தை பிடிப்பதற்கு நீண்ட காலம் காத்திருந்தார். பிறகு கார்த்திக் சுப்புராஜ் தான் பழைய ரஜினியை மீட்டு வந்தார். எல்லாருக்கும் ஒரு பிம்பம் இருக்கின்றது. அதை விட்டு விலகக் கூடாது என வலைப்பேச்சு அந்தணன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Listen News!