தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகையாக விளங்குபவர் பவித்ரா ஜனனி. விஜய் டிவியில் ஒளிபரப்பான "ஈரமான ரோஜாவே" என்ற தொடர் மூலம் தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களை கவர்ந்த இவர், அதன் பின்னர் "தென்றல் வந்து என்னைத் தொடும்" என்ற தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவரது அழகு, நடிப்பு, எளிமை, மற்றும் உண்மையான பிம்பம் ரசிகர்களிடையே விரைவில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுக் கொடுத்தது. இதனையடுத்து, விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சி Bigg Boss நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னை மீண்டும் ஒரு முறை மக்கள் முன்னாடி நிரூபித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது பவித்ரா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அவர் சென்றுள்ள இடங்கள், அந்த இடங்களில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் அவரது ஸ்டைலிஷ் லுக் என்பன ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
தற்போது பவித்ரா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வெளிநாடுகளில் எடுத்ததாகத் தெரிகிறது. இப் புகைப்படங்களில் அவர் வித்தியாசமான அழகில் தோன்றியுள்ளார். வைரலான போட்டோஸ் இதோ.!
Listen News!