விஜய் சேதுபதி நடித்த ஐம்பதாவது திரைப்படமான ‘மகாராஜா’ படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் நேற்று பத்திரிகையாளர்கள் காட்சி முடிந்ததும் படக்குழுவினர்களுக்கு பாராட்டு குவிந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த புளூ சட்டை மாறன் பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களை கூறி ஒரு சில குறைகளை மட்டும் கூறியுள்ளார்.
முதலில் படத்தின் கதை சுருக்கத்தை முதலில் கூறிய புளூசட்டை மாறன் அதன் பின்னர் முதல் பாதையில் தேவையில்லாத காட்சிகள் இருப்பது போல் விமர்சனம் செய்த நிலையில் இரண்டாவது பாதியில், முதல் பாதியில் நாம் தேவையில்லை என்று நினைத்த காட்சிகள் எல்லாம் தேவையானதாக இருக்கிறது என்றும் திரைக்கதை மிகவும் அருமையாக அமைந்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
விஜய் சேதுபதி நடிப்பை பாராட்டியதோடு, அனுராக் காஷ்யப் நடிப்பும் நன்றாக இருக்கிறது என்றும் ஆனால் அவரது குரலுக்கும் அவருடைய வாயசைப்பிற்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது என்றும் குறை கூறினார். அதேபோல் தேவையில்லாத காமெடி, ரொமான்ஸ், ஹீரோயின் என்பதெல்லாம் இந்த படத்தில் இல்லை என்றும் கூறியுள்ளார்.
இந்த படம் இரண்டாவது பாதியை போலவே முதல் பாதியும் விறுவிறுப்பாக அமைத்திருந்தால் ஒரு சூப்பர் படம் என்று சொல்லலாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்த படம் ஒருமுறை பார்க்கும் வகையில் ஒரு நல்ல படமாக தான் இருக்கிறது என்றும் புளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் சில லாஜிக் மீறல் இருப்பதாகவும் அது மட்டும் இன்றி இந்த படம் மலையாளத்தில் ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் உருவான ’இரட்டா’ படத்தை பல இடங்களில் ஞாபகப்படுத்துகிறது என்றும், அதேபோல் கொரியன் படமான ’ஓல்ட் பாய்’ என்ற படத்தையும் ஞாபகப்படுத்துகிறது என்றும் கூறியுள்ளார். ஆனாலும் இந்த படம் விஜய் சேதுபதிக்கு ஒரு வெற்றிப்படம் தான் என்று புளூ சட்டை மாறன் இறுதியில் தெரிவித்துள்ளார்.
Listen News!