• Oct 23 2024

ஆரம்பிக்கலாமா..? மாஸ் டயலாக்குடன் என்ட்ரி கொடுத்த ஆண்டவர்... வெளியானது Biggboss-7 ப்ரோமோ வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிவருகிறது. இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. இந்த நிகழ்ச்சியை முன்னணி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 


அந்தவகையில் அக்டோபர் 1-ஆம் தேதி இதன் 7-ஆவது சீசன் ஆரம்பமாக இருக்கின்றது. அத்தோடு பிக்பாஸில் இந்த முறை ஒரு வீடு அல்ல, இந்த முறை இரண்டு வீடுகள் எனவும், பிக்பாஸும் இரண்டு தான் எனவும் ஏற்கெனவே தகவல் வெளியாகியமையை தொடர்ந்து இந்த சீசன் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணம் தான் இருக்கின்றது.


இந்நிலையில் தற்போது மற்றுமோர் ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில் நம்ம ஆண்டவர் "எது சரி என்பதை முதலில் முடிவு செய்தால் தான் யாரு சரி என்பதே தெரியும்" என மாஸ் டயலாக்கோடு என்ட்ரி கொடுத்துள்ளார். அத்தோடு பிக்பாஸ் ஆரம்பமாவதற்கு இன்னும் 5நாட்கள் மட்டுமே இருக்கு என்பதனையும் ஞாபகப்படுத்திச் சென்றுள்ளார்.

இதோ அந்த சூப்பரான வீடியோ..!  

Advertisement