விஜய் சேதுபதி, தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் மக்கள் செல்வனாக வாழ்ந்து வருகிறார்.
மிகவும் தரமான படங்கள் நடித்து மக்களின் மனதை வென்ற விஜய் சேதுபதிக்கு மகளாக மகாராஜா படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர்தான் சாச்சனா.
சாச்சனாவுக்கு சாதனா என்ற ஒரு சகோதரி இருக்கின்றார்.
இந்நிலையில் சாச்சனா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போவதற்கு இரண்டு மாதம் முன்பாகத்தான் அவரது சகோதரிக்கு திருமணம் இடம்பெற்றது.
சாதனா, முரளி என்ற நபரையே தனது பெற்றோருடைய சம்மதத்துடன் காதல் திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் சாசனா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வந்ததற்குப் பின்னராக சாச்சனா, சாதனா இரண்டு பேருமே சேர்ந்து லெவன் திரைப்படத்தில் நடித்திருந்தார்கள்.
அந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று ஹிட்டாயிருந்தது.
இந்நிலையில் குறித்த படம் ஹிட்டான சிறிது நாளிலேயே சாதனா தான் கணவருடன் சேர்ந்து எடுத்து கொண்ட எல்லா படங்களையும் சமூகவலைத்தளங்களில் இருந்து நீக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, கணவருடன் சேர்ந்து ஒரு யூடியூப் சானல் ஒன்று இயக்கி வந்திருக்கின்றனர்.
இந்நிலையில் அந்த யூடியூப் சானலில் கடந்த சில வாரங்களாக இருவரும் சேர்ந்து எந்த வீடியோகும் அதில் வெளியிடவில்லை.
அதனாலேயே இவர்கள் இருவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் எங்களுக்கு விவாகரத்து ஆனது உண்மைதான். நாங்கள் இரண்டுபேர் பிரிஞ்சுதான் இருக்கின்றோம் என சோசியல் மீடியாவில் பதிவொன்றை இட்டுள்ளார் சாதனா.
அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
நாங்கள் இரண்டுபேரும் நிதானமாக யோசித்து தான் இந்த முடிவு எடுத்துள்ளோம்.
எங்கள் வாழ்க்கையில் நாங்கள் பிரிந்து இருக்க முடிவு செய்துள்ளோம்.
இந்த முடிவு நாங்கள் அவ்வளவு விரைவாக எடுத்த ஒன்றல்ல.
ஒருத்தற்கு ஒருத்தர் நிறைய மரியாதையும் அமைதியையும் தெளிவோடுதான் எங்களுடைய எதிர்காலத்தை சிந்தித்து இந்த முடிவு எடுத்திருக்கின்றோம்.
வாழ்க்கையில் முன்னேறணும் என்கின்ற ஒரே எண்ணத்தில் தான் இந்த முடிவு நாங்கள் எடுத்திருக்கின்றோம்.
எங்களுடைய முடிவுக்கு நீங்கள் மதிப்பு கொடுக்கணும். இந்த நேரத்தில் உங்கள் மரியாதைக்கும் எங்களுடைய தனியுரிமையும் மிகவும் முக்கியம் என்று கேட்டுக்கொள்கின்றோம் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதைப் பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்ததுடன்,இப்போதுதான் ஒரு திரைப்படத்தில் சாதனா நடித்திருப்பதாகவும் அதற்குள் விவாகரத்து வாங்கிட்டாங்களா என்றும் கூறி, இந்த விடயம் தான் இப்போது சோசியல் மீடியாக்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!