• Jan 19 2025

பிக் பாஸ் நிக்சனுக்கு அடித்த பேரதிஷ்டம்.. ரிலீஸான முதல் படைப்பு.. குவியும் வாழ்த்துக்கள்! வீடியோ இதோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகி 96 நாட்களை வெற்றிகரமாக கடந்து விட்டது . இந்த நேரத்தில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிக்சன் பிக் பாஸ் ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான தகவல் ஒன்றை சொல்லியுள்ளார்.

தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்து வளர்ந்த நிக்சன் ஒரு இந்திய நடிகர் என்பதோடு ராப் பாடல்களை பாடுவதில் பிரபலமாக காணப்பட்டார்.


விஜய் ஆண்டனியின் “திமிரு புடிச்சவன்” திரைப்படத்தின் மூலம் அவர் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக அவரது சிறப்பான நடிப்பு அவரது நடிப்புத் திறமைக்கு சான்றாக அமைந்தது.

இதை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற நிக்சன், சிறப்பாக விளையாடி மக்களை மனதை கவர்ந்த போதிலும், ஐஷுவுடன் காதல் வலையில் சிக்கி சிறிது காலம் தடுமாறி காணப்பட்டார்.


எனினும், பிக் பாஸ் வீட்டில் இருந்து ஐஷு வெளியேறிய பின்னர் மீண்டும் தனது ஆட்டத்தை அனல் பறக்க வைத்திருந்தார். இவ்வாறு தீயாய் விளையாடிவந்த நிக்சன், கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிக்சனுக்கு அதிஷ்டம் அடித்தது போல, அவரது முதலாவது படைப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, பிக் பாஸ் நிக்சனின் பாடல் வரிகளில் அடங்கிய வீடியோ பாடல் ஒன்று தற்போது வெளியிடப்பட்டு வைரலாகி வருகின்றது. இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.


Advertisement

Advertisement