• Jan 19 2025

இளம் ஹீரோக்களுக்கு சவால்விடும் சூப்பர் ஸ்டார்! தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு டீ-ஏஜிங் டெக்னாலஜி..?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

'ஜெயிலர்' படத்தினுடைய பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம்  ரஜினி, லோகேஷ் கனகராஜ் இணையும் 'தலைவர் 171' படத்தை தயாரிக்க இருக்கிறது. 

நடிகர் கமலை வைத்து 'விக்ரம்' என்ற பிரம்மாண்ட ஹிட் படத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜ், ரஜினியை இயக்கவுள்ளது ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.

இன்னும் சில தினங்களில் பிப்ரவரி 9ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது லால் சலாம் படம். படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார்.


இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக பேட்டி கொடுத்துள்ள நடிகர் விஷ்ணு விஷால், இந்தப் படம் தனக்கு பதற்றத்தை கொடுக்கவில்லை என்றும் மாறாக ரசிகர்களுடன் இணைந்து ரஜினி ரசிகனாக படத்தை திரையரங்கில் பார்க்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில்,  தற்போது படத்தின் கதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


அதாவது, இதுவரை இல்லாதவகையில் வித்தியாசமான முறையில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் தலைவர் 171 படம் இருக்கும் என்று முன்னதாக லோகேஷ் கனகராஜ் தன்னுடைய பேட்டியில் கூறியிருந்தார். 

லோகேஷ் கனகராஜ் படங்களில் வழக்கமாக இருக்கும் போதைப்பொருள் குறித்த கதைக்களமாக இல்லாமல் படம் வித்தியாசமான முறையில் இருக்கும் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்தை இளமையாக காட்டும்வகையில் டீ-ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement