• Sep 20 2024

அட்லி இயக்கத்தில் இணையும் பாகுபலி திரைப்பட நடிகர் !

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் அட்லீ.இவர் ஆரம்பகாலத்தில் இயக்குநர் ஷங்கரின் படங்களில் துணை இயக்குநராக பணி புரிந்தவர்.

2013ஆம் ஆண்டு நயன் மற்றும் ஜெய் நடிப்பில் வெளிவந்த ராஜா ராணி படத்தை இயக்கி இருந்தார்.அந்த திரைப்படம் இவர் திரைப்பயணத்தில் பெரிய திருப்பத்தை கொண்டு வந்தது.அதற்கு பின்னர் இவர் விஜய்யுடன் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்தார்.

இவ்வாறுஇருக்கையில் அட்லி அடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் நடிப்பில் உருவாகவுள்ள ஜவான் திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

மேலும் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் செம மாஸ்ஸாக ஜவான் படத்தின் Glimpse வீடியோவுடன் வெளியாகியிருந்தது. எனினும் அப்படத்தில் ஷாருக் கானின் கேட்டப் இந்தியளவில் பேசப்பட்டது.

இதனிடையே தற்போது அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராணாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே பாகுபலி படத்தின் முலம் இந்தியளவில் பிரபலமான ராணா ஷாருக் கான் திரைப்படத்தில் நடித்தால் பெரிய விஷயமாக பேசப்படும்.மேலும் இப்படத்தில் மேலும் ஒரு தென்னிந்திய பிரபலம நயன்தாரா கதாநாயகியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement