சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள படம் பிரின்ஸ். இப்படத்தின் மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக உள்ளார். இப்படத்தை அனுதீப் இயக்கியுள்ளர். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா என்கிற வெளிநாட்டு நடிகை நடித்து இருக்கிறார்.
மேலும் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இபபடம் வருகின்ற தீபாவளிக்கு பிரமாண்டமாக தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனால் படக்குழு ப்ரமுாஷன் பணியில் வேகமாக ஈடுபட்டு வருகின்றது.
இந்த நிலையில் ப்ரின்ஸ் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று ஐதராபாத் நகரில் நடந்தது. அதனை நடிகர் விஜய் தெவர் கொண்டா வெளியிட்டிருந்தார். அந்த வகையில் இந்த தெலுங்கு ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன் விஜய் தேவர் கொண்டாவைப் பாராட்டியதோடு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.
மேலும் அதில் அவர் கூறியதாவது சான் சினிமாவிற்குள் நுழைந்தபோது ரயில் போற மாதிரி தான் மெதுவாக மெதுவாக சென்று தான் வளச்சியடைந்தேன். ஆனால் விஜய் தேவர் கொண்டா விமானம் மாதிரி குறுகிய காலத்திலேயே இடம் பிடித்து விட்டார்.இந்திள சினிமாவின் ஸ்மாட் ஹுரோவாகவும் இருக்கின்றார். அவருடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஆசைப்படுகின்றேன் எனத் தெரிவித்தார்.
அத்தோடு எனக்கு தெலுங்கு தெரியாது கண்டிப்பாக அடுத்த படம் நடித்தால் அதன் ப்ரமோஷன் நிகழ்ச்சியின் போது கட்டாயம் தெலுங்கில் பேசுவேன் என்னும் என்னுடைய படத்திற்கு சர்ப்போட் பண்ணின அனைவருக்கும் நன்றி என்றும் அதில் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Listen News!