• Jan 18 2025

ஷங்கரின் 2வது மகளுக்கும் திருமணமா? மணமகள் கோலத்தில் அதிதி ஷங்கர்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணம் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த நிலையில் அந்த திருமணத்தில் அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் வருகை தந்தார்கள் என்பதும் திருமணம் குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆனது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ஷங்கரின் மூத்த மகள் திருமணம் நடந்து ஒரு சில வாரங்களே ஆகியுள்ள நிலையில் அதிதி ஷங்கருக்கு திருமண ஆசை வந்துவிட்டதா என்று தெரியவில்லை, அவர் மணமகள் போல் போட்டோஷூட் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை அதிதி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் அவரது ஒரு மில்லியன் ஃபாலோயர்கள் அதனை ரசித்து வருவார்கள் என்ற நிலையில், தற்போது மணமகள் போலவே போஸ் கொடுத்து அவர் எடுத்துள்ள புகைப்படங்களை பார்த்து பலர் ’ஷங்கர் வீட்டில் இன்னொரு மணமகள் தயாராகி விட்டார்’ என்றும் ’விரைவில் திருமணம் அறிவிப்பு வருமா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால் அதிதி ஷங்கர் தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் மேலும் இரண்டு பிரபலங்களின் படங்களில் நடிக்க கமிட்டாகி இருப்பதாகவும் சினிமாவில் பிசியாக இருப்பதால் அவர் இப்போதைக்கு திருமணம் செய்ய வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் அவரது மணமகள் போன்ற போட்டோஷூட் புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.


Advertisement

Advertisement