• Sep 29 2025

கண்ணழகி பிரியா வாரியரின் ஹாட்டான போட்டோ ஷூட்..! இளசுகளை கிறங்கடிக்க வைத்த ஸ்டீல்கள்..

subiththira / 5 days ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களுக்குப் பெரும் அளவில் அறிமுகமான நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் தற்போது சமூக வலைத்தளங்களில் கலக்கி வருகின்றார். மலையாளத்தில் வெளியான "ஒரு அடார் லவ்"  என்ற படத்தின் மூலம் பிரபலமடைந்த இவர், அதன் பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிப்பதோடு, தனது தனிப்பட்ட கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் தொடர்ந்து ரசிகர்களின் இதயத்தை கைப்பற்றி வருகிறார்.


2019-ம் ஆண்டில் வெளியான  "ஒரு அடார் லவ்" படம், அதன் தனித்துவமான காதல் காட்சிகளால், குறிப்பாக பிரியா பிரகாஷ் வாரியரின் நடிப்பு சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் புகழ் பெற்றது. அந்தக் காட்சி குறைந்த காலத்தில் YouTube மற்றும் இன்ஸ்டாகிராமில் மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றிருந்தது.


இந்த திரைப்படம் மூலம் பிரியா தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். இத்தகைய வெற்றியுடன் அவர் தனது திரைக்கலைஞர் வாழ்க்கையை ஆரம்பித்து, தொடர்ந்து வெற்றிகரமான படங்களில் பணியாற்றத் தொடங்கினார்.


பிரியா சமீபத்தில் வெளியான ‘குட் பேட் அக்லி’ (Good Bad Ugly) என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய அவர், அவரது அழகான நடன திறமை மற்றும் கவர்ச்சி என்பவற்றின் மூலம் ரசிகர்களை மீண்டும் அசத்தினார்.


அத்தகைய நடிகை தற்பொழுது படு கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளார். அந்த புகைப்படங்கள் பரவலாக பகிரப்பட்டு, சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்களைப் பெற்று வருகின்றன. 

Advertisement

Advertisement