• Nov 05 2025

ரோபோ சங்கரின் மறைவுக்கு ஏன் அஞ்சலி செலுத்தவில்லை? வடிவேலு விளக்கம்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபலமான ரோபோ சங்கர் கடந்த 18ம் திகதி உயிரிழந்தார். இவருடைய மறைவு பலரையும் கதிகலங்கச் செய்துள்ளது.

புதிய படத்தின் ஷூட்டிங் இல்  மயங்கி விழுந்த ரோபோ சங்கர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை  பெற்று வந்தார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  அவருக்கு ஏற்கனவே மஞ்சள் காமாலை நோய் இருந்தது. மேலும் உடலில் நீச்சத்து குறைபாடும்,  இரத்த அழுத்தமும் ஏற்பட்டுள்ளன.

அதன் பின்பு அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது. இதன்போது ரோபோ சங்கரின் மனைவி  இறுதி ஊர்வலத்தில் நடனம் ஆடியதும் படு விமர்சனங்களுக்கு   உள்ளாகி வருகின்றன.  இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் தங்களுடைய கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். 


இந்த நிலையில், ரோபோ சங்கரின்  மறைவுக்கு நடிகர் வடிவேலு அஞ்சலி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.  இதனை பல யூட்யூப் சேனல்களும் விமர்சனம் செய்தன. 

இவ்வாறான நிலையில் தன் மீது எழுந்த விமர்சனங்களுக்கு வடிவேலு விளக்கம் கொடுத்துள்ளார்.  அதாவது ரோபோ சங்கர் உயிரிழந்த நாளில் தான் ஊரில் இல்லாதது தான் அஞ்சலி செலுத்த வராததற்கு காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். 



 

Advertisement

Advertisement