• Oct 07 2024

’பிதாமகன்’ படத்தை திரும்ப எடுத்து விட்டாரா பாலா.. ‘வணங்கான்’ டிரைலர்..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் ‘வணங்கான்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இரண்டு நிமிடங்களுக்கு மேல் உள்ள இந்த ட்ரெய்லரில் உள்ள காட்சிகளை பார்க்கும்போது பாலாவின் முந்தைய படங்கள் ஞாபகத்திற்கு வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அருண் விஜய்யின் கேரக்டர் அச்சு அசலாக அப்படியே ’பிதாமகன்’ விக்ரம் கேரக்டர் போல் உள்ளது என்றும் அவரது நடிப்பின் சாயல் பெருமளவில் உள்ளது என்றும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.

அதேபோல் பாலாவின் மற்ற படங்களில் உள்ள அதிகமான வன்முறை காட்சி இந்த படத்திலும் உள்ளது என்றும், இதுவும் பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவி, வில்லன்களை கொடூரமாக பழிவாங்கும் கதையாக தான் இருக்கும் என்றும் ட்ரைலரில் இருந்து தெரிய வருகிறது.



மொத்தத்தில் மீண்டும் பாலா மீண்டும் வன்முறையுடன் கூடிய ஒரு பழிவாங்கும் கதையை அருண் விஜய்யை வைத்து எடுத்துள்ளதாக தெரிய வருகிறது. மேலும் இந்த படத்தின் டிரைலரை பார்த்த ஒரு சிலர் ’பிதாமகன்’ படத்தை தான் மீண்டும் பாலா எடுத்துவிட்டாரோ என்றும் ஒருவேளை ’பிதாமகன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமோ என்றும் இந்த ட்ரெய்லருக்கு கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், மிஷ்கின், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார் என்பதும் இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement