இன்றைய தினம் உலக அளவில் இஸ்லாமிய சொந்தங்களால் கொண்டாடப்படும் பக்ரீத் அல்லது ஹஜ் பெருநாள் என அறியப்படும் இந்நாளானது இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக இப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் கவிஞர் மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் ஹஜ் பெருநாளுக்கான வாழ்த்துகளோடு ஹஜ் இன் நோக்கத்தையும் சாராம்சத்தையும் வெளிப்படுத்தும் முகமாக கவிதை ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
கவிஞர் தனது கவிதையில் தியாகத்தைக் கொண்டாட்டக் குறியீடாகக் கொள்ளும் பக்ரீத் சக மனிதனை நேசிக்கச் சொல்கிறது அண்டை வீட்டாருக்கும் ஏழைகளுக்கும் ஈகைப் பண்பாட்டை போதிக்கிறது குறிக்கோள் மிக்க இந்தக் கொண்டாட்டத்தை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என குறிப்பிட்டிருந்தார்.
குடும்பம் நிறுவனம் அரசு
என்ற எந்த அமைப்பும்
யாரோ ஒருவரின்
தியாகத்தை முன்வைத்தே
கட்டமைக்கபடுகிறது
அந்த தியாகத்தைக்
கொண்டாட்டக்
குறியீடாகக் கொள்ளும் பக்ரீத்
சக மனிதனை
நேசிக்கச் சொல்கிறது
அண்டை வீட்டாருக்கும்
ஏழைகளுக்கும்
ஈகைப் பண்பாட்டை
போதிக்கிறது
குறிக்கோள் மிக்க
இந்தக்…
Listen News!