• Sep 21 2023

baakiyalakshmi-சீரியலில் இருந்து ரித்திகா விலகுவதற்கு என்ன காரணம் தெரியுமா?- இப்டியொரு பிரச்சினையில் இருக்கின்றாரா?

stella / 1 month ago

Advertisement

Listen News!


விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடராக பல மாதங்களாக மாஸ் காட்டி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது. இந்த சீரியல் சமீபகாலமாக டிஆர்பி ரேட்டிங்கில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்நிலையில் தற்போது கேன்டீனில் பாக்கியாவின் டீம் சொதப்பிய நிலையில், கேன்டீன் கான்டிராக்ட் பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.

இதனால் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.இந்த சீரியலில் எழிலின் மனைவி அமிர்தா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ரித்திகா.இவர்கள் இருவரும் பாக்கியா தனது கெரியரில் முன்னேற அதிக ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.


இந்த நிலையில் இந்த சீரியலில் இருந்து ரித்திகா விலகியுள்ளார். கடந்த ஆண்டில் இவருக்கு திருமணம் நடைபெற்றது.இவர் சீரியலில் இருந்து விலகியது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாகவே உள்ளது.இதனால் இவர் எதற்காக சீரியலில் இருந்து விலகினார் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். 

அந்த வகையில் ரித்திகா ஜிம்மில் கடுமையாக வொர்க்கவுட் செய்யும் வீடியோவைப் பதிவிட்டுள்ளார். இதனால் உடல் எடை அதிகரித்ததால் தான் ரித்திகா சீரியலில் இருந்து விலகியுள்ளாரா? என்று கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement