• May 13 2024

அவர் யாருடைய காலிலும் பொசுக்கென்று விழுபவர் இல்லை- ரஜினிகாந்த் பற்றி பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபலம்

stella / 8 months ago

Advertisement

Listen News!


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 10ம் தேதி ரிலீஸான திரைப்படம் தான் ஜெயிலர்.இந்தத் திரைப்படம் வெளியாகி 10 நாட்களில்  உலக அளவில் ரூ. 500 கோடி வசூல் செய்துவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.மேலும் ஜெயிலரில் வந்த ஹுகும் பாடல் Spotifyல் முதலிடத்தை பிடித்திருக்கிறது.

மேலும் ஜெயிலர் படம் ரிலீஸாவதற்கு முதல் நாள் ரஜினிகாந்த் இமயமலைக்குச் சென்றிருந்தார்.இமயமலைக்கு சென்றதை அடுத்து உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டிற்கு சென்று சந்தித்தார். வீட்டு வாசலில் தனக்காக காத்திருந்த யோகி ஆதித்யநாத்தை பார்த்ததும் அவர் காலில் விழுந்து ரஜினிகாந்த் ஆசி வழங்கினார் என்று கூறப்படுகின்றது.


இதனால் தன்னை விட 21 வயது சிறியவரான யோகியின் காலில் போய் ரஜினி விழுந்திருக்கிறாரே என்றும் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வந்தனர்.இதனால் ஆதித்யநாத் காலில் ரஜினி காரணமாகத் தான் விழுந்தார் என்று கூறப்பட்டது.

அதாவது ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருக்கும் சாமியார்கள் விஷயத்தில் ரஜினி வயது வித்தியாசம் பார்ப்பது இல்லை.யோகி ஒரு துறவி என்கிற ஒரே காரணத்திற்காக தான் அவரின் வயதை பற்றி யோசிக்காமல் சட்டென்று காலில் விழுந்து ஆசி பெற்றார். மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை.


முன்பும் கூட தன்னை விட சிறு வயது கொண்ட சாமியார்களின் காலை தொட்டு கும்பிட்டு ஆசி பெற்றிருக்கிறார் . அவர் மதிப்பது ஆன்மீகவாதிகளை, வயதை அல்ல. அதனால் யோகி ஆதித்யநாத் ஒரு மாநில முதல்வர் என்பதால் அவர் காலில் விழவில்லை. யார் காலிலும் விழும் பழக்கம் ரஜினிக்கு இல்லை என்றும் அதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

யோகி ஆதித்யநாத்தை அடுத்து சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை இன்று சந்தித்து பேசினார் ரஜினி. அகிலேஷ் யாதவை பார்த்தும் அவரை கட்டிப்பிடித்தார்.தான் ரஜினியை சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு அகிலேஷ் யாதவ் கூறியிருப்பதாவது,

நான் மைசூரில் என்ஜினியரிங் படித்தபோது பெரிய திரையில் ரஜினிகாந்த்ஜியை பார்த்து சந்தோஷப்பட்டேன். அந்த சந்தோஷம் இன்றும் அப்படியே இருக்கிறது. 9 ஆண்டுகளுக்கு முன்பு அவரை முதல் முறையாக நேரில் சந்தித்தேன். அதில் இருந்து இதுவரை நண்பர்களாக இருக்கிறோம் என்றார்.


தலைவர் எந்த அரசியல் தலைவரை பார்த்தாலும் பொசுக்கென்று காலில் விழுபவர் இல்லை என்பதற்கு இந்த புகைப்படம் சாட்சி. யோகி ஆதித்யநாத் ஒரு சாமியார் என்பதால் அந்த மரியாதைக்காக காலில் விழுந்தார். ஜெயிலர் வெற்றியை பார்த்து பொறாமையில் ரஜினியை பற்றி பேச வேண்டாம் என்றும் கூறுகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement