• May 06 2024

மாலைப் பொழுதில் ஹரீஷ் கல்யாணுடன் உல்லாசப் பயணம் செய்த அதுல்யா…எதனால் தெரியுமா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

‘காதல் கண்கட்டுதே’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. இவரின் எதார்த்தமான நடிப்புக்கும், ஹோம்லியான லுக்கிற்கும் மயங்காத இளைஞர்களே இல்லை. இதன் காரணமாக முதல் படத்திலேயே இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது. அறிமுகப்படத்தை தொடர்ந்து பின் சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த 'அடுத்த சாட்டை' என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார்.

அதனைத் தொடர்ந்து மேலும் ஒரு சில படங்களில் நடித்து தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கின்றார். இந்த நிலையில் சமீபத்தில் இவரின் நடிப்பில் உருவான படம் 'டீசல்' இப்படத்தில் கதாநாயகனாக ஹரீஷ் கல்யாண் நடித்திருக்கின்றார்.

இப்படத்தினை ஜிவி பிரகாஷ், சரத்குமார், யோகிபாபு, சுரபி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவான 'அடங்காதே' என்ற படத்தை இயக்கிய சண்முகம் முத்துசாமி இந்தப் படத்தை இயக்கி வருகிறார். அத்தோடு முழுக்க முழுக்க வடசென்னையை கதைக்களமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது. படத்திற்கு இமான் இசையமைத்திருப்பதோடு எஸ்பி சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

மேலும் 'ஓ மணப்பெண்ணே' உள்ளிட்ட காதல் கதைகளில் மென்மையான வேடங்களில் நடித்து வந்த நம்ம ஹரீஷ் கல்யாண் தற்போது இந்தப் படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். அதுமட்டுமல்லாது படத்தில் அதுல்யா ரவியும் வழக்கறிஞராக த்ரில்லிங் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய நிலையில் ஒரே கட்டமாக சூட்டிங்கை முடித்து விட்டு விரைவாக இப்படத்தினை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்தப் படத்திற்காக நடுக்கடலில் சூட்டிங் ஒன்று எடுக்கப்பட்டது. அதில் ஹரீஷ் கல்யாண் மற்றும் அதுல்யா ரவி பங்கேற்றிருந்தனர். மாலைப் பொழுதில் எடுக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வின் வீடியோவை அதுல்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் இவர் ஹரீஸ் கல்யாணுடன் நெருக்கமாக அமர்ந்திருந்து போஸ் கொடுத்திருக்கின்றார். மிகவும் ரொமாண்டிக்காக அந்த ஷூட் ஆனது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement