• May 19 2024

இவங்க தான் நம்ம பிக்பாஸ் வீட்டின் சவுண்ட் பார்ட்டி...சிறுவயதிலே எப்படி இருந்தாங்க…இப்போ இப்படி இருக்காங்களே..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டீவியின் அடையாளம் என்றாலே அது நம்ம பிரியங்கா தான். 'ஒல்லி பெல்லி' என்ற நிகழ்ச்சியின் மூலம் விஜய் டீவியில் என்ட்ரி கொடுத்து இன்று விஜய் டீவியையே தனது குரலால் ஆட்டிப் படைத்து வருபவரே தொகுப்பாளினி பிரியங்கா. அதனைத் தொடர்ந்து 'சூப்பர் சிங்கர்' என்ற நிகழ்ச்சியில் மா.கா.பாவுடன் கைகோர்த்து பட்டி தொட்டியெங்கும் தனது புகழை பரப்பினார்.

இந்த நிகழ்ச்சியில் இருவரின் நகைச்சுவையும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இவர் நின்றாலே அந்த இடம் கலகலப்பாக மாறிவிடும். அதுமட்டுமன்றி எப்போதுமே சத்தமாக தான் சிரிப்பார். 'சூப்பர் சிங்கர்' மட்டுமின்றி விஜய் தொலைக்காட்சியில் 'ஸ்டார்ட் மியூசிக்', 'தி வால்', 'பிபி ஜோடிகள்' என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் பிரியங்கா.

அதுமட்டுமன்றி தனது நீண்ட நாள் கனவான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபற்றியிருக்கின்றார். அங்கும் எப்போதும் இவரது குரல் தான் அதிகமாக ஒலித்து கொண்டிருக்கும். அதுமட்டுமன்றி அந்த நிகழ்ச்சியின் வாயிலாக மக்கள் மத்தியில் பல எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்றிருக்கின்றார்.

பிக்பாஸ் வீட்டிலேயே அதிகம் ஒலித்த குரல் இவரது என்று தான் சொல்லலாம். அந்த அளவிற்கு எப்போதும் கலகலப்பாக இருப்பார். இவரை எப்போதுமே எல்லோரும் 'சவுண்ட் பார்ட்டி' என்று தான் அழைப்பார்கள்.

அந்த வகையில் சமீபகாலமாக திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகிறது. அண்மையில் கூட விஜய்யின் சிறு வயது புகைப்படம் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது சின்னத்திரையின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நம்ம பிரியங்காவின் சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் "இந்த சிறுமி தான் தன்னுடைய சவுண்டினால் தற்போது சின்னத்திரையை கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு முன்னணி நட்சத்திரம்" எனக் கூறி வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement