• Jan 15 2025

அம்பானி குடும்பத்திற்காக அட்லி இயக்கிய திரைப்படம்.. இணைந்த அமிதாப்பச்சன்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

அம்பானி குடும்ப திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் இந்த திருமணத்தில் பத்து நிமிட அனிமேஷன் படம் ஒன்று திரையிடப்பட்டதாகவும் இந்த படத்தை அட்லி தான் இயக்கியதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான அட்லி, பாலிவுட்டில் ’ஜவான்’ என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அகில இந்திய அளவில் புகழ் பெற்றுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமணத்தில் அட்லி தனது மனைவியுடன் கலந்து கொண்டார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் அட்லி இந்த திருமணத்தில் ஒரு விருந்தினராக மட்டும் கலந்து கொள்ளாமல் அம்பானி குடும்பத்திற்காக 10 நிமிட அனிமேஷன் திரைப்படம் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமணத்தின்போது ஒளிபரப்பானதாகவும் இந்த படத்திற்கு பின்னணி குரல் கொடுத்தவர் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் என்றும் கூறப்படுகிறது.



பாலிவுட்டில் பிரபல இயக்குனர்கள் ஏராளமானோர் இருக்கும் நிலையில் அம்பானி குடும்பத்தினர் தங்கள் குடும்ப திருமணத்தில் ஒரு அனிமேஷன் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை அட்லியிடம் கொடுத்தது தான் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பக்கம் குரு ஷங்கர் ’இந்தியன் 2’ என்ற தோல்வி படத்தை கொடுத்திருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அவருடைய சிஷ்யன் அட்லி  இந்திய திரை உலகில் உச்சத்தை எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement