தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம் கன்னடம் உள்ள மொழிகளில் நடித்து பிரபலம் ஆனவர் தான் சாக்ஷி அகர்வால். இவர் ராஜா ராணி படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருப்பார். ஆனாலும் அந்த கேரக்டரில் நடித்ததற்காக சமீபத்தில் வருத்தம் தெரிவித்து இருந்தார்.
அதன் பின்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா மற்றும் அஜித் குமார் நடிப்பில் வெளியான விசுவாசம் உள்ளிட்ட படங்களிலும் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருந்தார் .
இவர் கடந்த பத்து வருடங்களாக சினிமா துறையில் நடித்து வருகின்றார். ஆனாலும் இவருடைய திறமையை வெளிக்காட்டும் வகையில் இதுவரை எந்த ஒரு வாய்ப்பும் இவருக்கு கிடைக்கவில்லை. மேலும் இவர்கள் நடிப்பில் உருவான ஆயிரம் ஜென்மங்கள் மற்றும் தி நைட் உள்ளிட்ட திரைப்படங்கள் இன்னும் ரிலீசாகவில்லை.
மேலும் சாக்ஷி அகர்வால் கடந்த மாதம் தனது காதலர் ஆன நவநீத்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் கோவாவில் நடைபெற்றது. இதில் பல திரைப் பிரபலங்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
இந்த நிலையில், மாலைத் தீவுக்கு ஹனிமூன் சென்று உள்ளார் சாக்ஷி அகர்வால். அங்கு பிகினி உடையில் போஸ் கொடுத்திருக்கும் சாக்ஷி அகர்வாலின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்
Listen News!