• Dec 04 2024

மத நல்லிணக்க செயல்களிற்கு முன்னோடியாகத் திகழும் அஜித்..!நடிகர் சத்யராஜ் பாராட்டு

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் நடிகர் சத்யராஜ் அவர்கள் நடிகர் அஜித்தின் சமூக சேவை குறித்து பாராட்டு உரையை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசும் போது, சத்யராஜ், அஜித் எந்தவித பிரச்சாரத்தையும் விரும்பாமல் எளிமையான முறையில் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருவதைப் பற்றி குறிப்பிட்டார்.


குறித்த உரையில் அஜித் மதம் பேதம் பார்க்காமல் பழகுவார் என்றும் அஜித் அவர்கள் சமீபத்தில் குறிப்பிட்ட ஒரு பதிவான "சம்மந்தமே இல்லாமல் ஒரு நபர் மேல் கோபம் வருவதற்கு காரணம் மதம் தான் மற்றும் ஏதோ ஒரு நாட்டுக்கு போறம் யாரோ ஒருவரை பாக்கிறம் அவருக்கும் எங்களுக்கும் வாய்க்கால் வரம்பு சண்டை ஏதும் இல்லை இருப்பினும் அவரது மதத்தினை கேட்டதும் வெறுப்பு வர காரணம் மதம் தான்" இதனை குறிப்பிட்டு அஜித்தினை மேடையில் புகழ்ந்துள்ளார்.

Advertisement

Advertisement