• May 21 2024

நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சுருண்டு விழுந்த அண்ணாமலை! சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட் வெளியாகியுள்ளது. 

அதன்படி இன்றைய எபிசோட்டில், முத்து டிரைவரிடம் போகும் வழியை சொல்லிக் கொண்டிருக்க கடைசியாக மீனாவின் வீட்டிற்கு வந்து சேர்க்கின்றனர். இதற்கு செல்வம், 'இப்ப குடிச்சிருக்குமே எப்படி வீட்டுக்கு போறது' என்று கேக்க, 'நான் எங்க போக போறன். என்ன விட நீ கம்மியா தான் குடிச்சிருக்க நீ போய் மீனா இருக்கவா என்டு பாரு, பிறகு முத்து இருக்கான்னு கேளு, முத்து காணாம போயிட்டான்னு சொல்லு, அவ அப்ப தான் எனக்கு போன் பண்ணுவா, நான் கால் மேல கால் போட்டு பேசுவேன்' என சொல்லி அனுப்பி வைக்கிறார்.

அதன்பின், மீனா வீட்டுக்கு வந்த செல்வம், 'காலையிலிருந்து முத்துவ காணோம், அவன் இங்க வந்தானா? என்று கேட்க, இதற்கு மீனா மாமா 'அவன் இங்கதான் வந்தாரு, சாப்பிட்டு படுத்து தூங்கிட்டாரு, அத்தோட அந்த வெட்டி பையன் செல்வம் என்ன குடிக்க கூட்டிட்டு போக இங்க வருவான், அப்படி அவன் வந்தா நான் தூங்கிட்டு இருக்கேன்னு சொல்லி அனுப்பிவிடு' என முத்து சொன்னதாக சொல்ல பல்பு வாங்கி செல்கிறார் செல்வம்.


பிறகு நடந்த விஷங்களை செல்வம் முத்துட்ட சொல்ல, 'அந்த அளவுக்கு பேசினா போதும். எல்லாரும் நல்லா இருக்காங்க' என சொல்லி அங்கிருந்து கிளம்ப, மொட்டை மாடியில் இருந்து இத பார்த்த மீனா சந்தோஷப்படுகிறார்.

இதை தொடர்ந்து 'முத்துவ காணமே' என  அண்ணாமலை  சொல்லிக் கொண்டிருக்கும் போதே வீட்டிற்குள் வருகிறார் முத்து. குடிச்சிட்டு வந்த முத்துவ  அண்ணாமலை திட்ட, 'மனசு வலிக்குது அதான் குடிச்சன்' என முத்து சொல்கிறார். இடையில் மனோஜ் முத்து  ஆகிய இருவருக்கும் வாக்குவாதம் அதிகமாகி முத்து மனோஜ் போட்டு அடிக்க, இடையில் ஒரு அடி ரோகிணிக்கும் விழுகிறது.

இது எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அண்ணாமலை நெஞ்சை பிடித்துக் கொண்டு கீழே சாய்ந்து விழுகிறார். மறுபக்கம் தூக்கத்திலிருந்த மீனா 'ஏதோ தப்பாக இருக்கே' என தூக்கத்திலிருந்து பயந்து எழும்புகிறார்.

இதையடுத்து, அண்ணாமலையை ஹாஸ்பிடலில் கொண்டு வந்து சேர்க்க 'அவருக்கு மைல்ட் அட்டாக், ஆனா இன்னும் அவர் கண் முழிக்கல' என சொல்கிறார் டாக்டர். 

மேலும், 'அவர்ட ஹார்ட் பீட் கம்மியா இருக்கு கொஞ்சம் சீரியஸ் கண்டிஷன் தான் இருக்கார்' என டாக்டர் சொன்னத கேட்டு எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement