• May 01 2024

தளபதி 68 படத்தில் விஜய்யின் தங்கையாக நடிக்கவுள்ள நடிகை யார் தெரியுமா?- இந்த டுவிஸ்டை எதிர்பார்க்கலையே...

stella / 6 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் இறுதியாக லியோ என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.படம் வெளியாகி முதல் நாளில் 148 கோடி ரூபாயை வசூலித்ததாக படக்குழு அறிவித்தது. அதனையடுத்து முதல் வாரத்தின் முடிவில் 460 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனை அடுத்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.படத்தின் பூஜை பிரசாத் ஸ்டூடியோவில் போடப்பட்டு ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அதனையடுத்து படக்குழு அடுத்த ஷெட்யூலுக்காக வெளிநாடு சென்றிருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் பூஜை வீடியோவும் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. 


தளபதி 68ல் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, அஜ்மல் உள்ளிட்டோர் கமிட்டாகியிருக்கிறார்கள் . பல வருடங்கள் கழித்து பிரசாந்த் தமிழில் ரீ எண்ட்ரி ஆவதாலும்; பெரும் நட்சத்திர பட்டாளம் களமிறங்கியிருப்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில் விஜய்க்கு தங்கையாக பிரபலமான நடிகை ஒருவர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது லவ் டுடே படத்தின் மூலம் சென்சேஷன் ஆன நடிகை இவானாதான் விஜய்க்கு தங்கையாக நடிக்கிறார் என படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் படத்தில் இவானாவின் கதாபாத்திரத்துக்கு ரொம்பவே முக்கியத்துவம் இருப்பதாகவும் சொல்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement