• Sep 08 2024

அனிரூத்திற்கு இந்த விஷயம் ஆரம்பத்தில எல்லாம் தெரியவே தெரியாது- சுவாரஸியமான தகவலைக் கூறிய அவரின் அப்பா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தனுஷ் நடிப்பில் வெளியான மூன்று படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியவர் தான் அனிரூத்.இப்படத்தைத் தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி, மான் கராத்தே, கத்தி, காக்கி சட்டை, மாரி என்று தொடர்ந்து பல ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

பல பாடல்களையும் பாடியுள்ள இவர் தற்போதைய முன்னணி இசையமைப்பாளர்களுக்கெல்லாம் எடுத்துக் காட்டாகவும் விளங்குகின்றார். இந்த நிலையில் அனிரூத் குறித்து ஒரு ரகசியத் தகவலை அவருடைய அப்பா வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

அதாவது சின்ன வயதில் அவர் சுத்தமாக பாடியதே கிடையாது என்றும், திடீரென்று சாதாரணமாக பாட தொடங்கிய அனிருத் தற்போது சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார், ஹை பிச்சிலும் பாடுகிறார். இந்த அளவிற்கு ரசிகர்களைக் கொண்டுள்ள அனிருத்தை பார்க்கும் போது ஒரு அப்பாவாக இல்லாமல் ஒரு ரசிகராக நான் பெருமைப்படுகிறேன் என்றும் கூறியுள்ளார்.

31 வயதான இசையமைப்பாளர் அனிருத் பலரின் கனவு நாயகனாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் இசையமைத்த பல பாடல்கள் தற்போது ரசிகர்களின் ஃபேவரைட் சூப்பர் ஹிட் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement