• May 19 2024

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை காயத்திரி யுவராஜுற்கு ரசிகர்கள் வைத்த முக்கிய கோரிக்கை-இதை மட்டும் செய்யாதீங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்டிவி மற்றும் சன்டிவி சீரியல்களில் நடித்து தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கும் முக்கிய நடிகை தான் காயத்ரி யுவராஜ், இவர் அரண்மனைக்கிளி சித்தி 2 போன்ற சீரியல்களில் நெடித்தவர் என்பதோடு அதிகம் நெக்கட்டிவ் ரோலைத் தேர்வு செய்தே நடித்து வந்தார்.

இருப்பினும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் ந மாயனின் தங்கையாக அமைதியான ரோலில் நடித்தார். இந்த சீரியலில் காயத்ரி மற்றும் ராஜு ஜோடிக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உருவானது. இந்த சீரியல் அண்மையில் முடிவடைந்தது.

இப்படி இருக்கையில், மீண்டும் அதே போன்ற மூத்த அக்கா ரோலில், 2 தங்கைகளுக்கு அக்காவாக காயத்ரி நடிக்கிறார். ஆர்யன் லீட் ரோலில் நடித்து இருக்கும் இந்த சீரியல் ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகவுள்ளது.பிரபல தெலுங்கு சீரியலான ரத்தமா குத்துரு சீரியலின் தமிழ் ரீமேக் தான் இந்த தொடர்.

தெலுங்கில் பயங்கர ஹிட்டடித்த இந்த சீரியல் அம்மா- மகள் சென்டிமெண்ட்டை அடிப்படையாக கொண்டது.இந்த தொடரின் தமிழ் ரீமேக் ஜீ தமிழில் விரைவில் ஒளிப்பரப்பாகவுள்ளது. அதுமட்டுமில்லை இந்த தொடரில் பிரபல நடிகை அர்ச்சனாவும் நடிக்கிறார் .

அர்ச்சனாவின் மூத்த மகளாக காயத்ரி நடிப்பதோடு இவருக்கு தங்கையாக பிரணிக்கா நடிக்கிறார்.இந்த சீரியலுக்கு மீனாட்சி பொண்ணுங்க என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலை போலவே இந்த சீரியலும் ஹிட்டடிக்கும் என காயத்ரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்த சீரியலின் அறிமுக புரமோ வெளியாகி இருந்தது. கூடிய விரைவில் சீரியல் டெலிகாஸ்ட் டைம் அறிவிக்கப்படும். காயத்ரியின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.அதே போல் நெகடிவ் ரோலில் நடிக்க வேண்டாம் என்று அன்பு கோரிக்கையும் வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement