• May 19 2024

விக்ரம் படத்தில் நடித்த குட்டிக் குழந்தையை கமல் இப்படித் தான் நடிக்க வைத்தாரா?- சூப்பர் அட்டேட்டாக இருக்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் விக்ரம்.ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷன் தயாரித்த இப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற பல நாடுகளிலும் கிட்டத்தட்ட 450 கோடி ரூபாய் வசூலையும் அள்ளியுள்ளது சமீபத்தில் இப்படத்தின் சூட்டிங் ஸ்பாட் வீடியோ, கமல்ஹாசன் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள், சண்டைக் காட்சிகள் மேக்கிங் வீடியோ போன்றவை வெளிவந்து ரசிகர்களைக் குஷிப்படுத்தியது.

இந்த படத்தில் நடித்திருந்த குழந்தையும் முக்கியமான கதாபாத்திரமாக இருந்தது. விக்ரம் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த குழந்தையிடம் கமல் எவ்வாறு நடந்து கொள்வார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

அதாவது குழந்தையை பேர் சொல்லிக் கூப்பிட்டவுடன் திரும்புவதற்கும், குழந்தையை சிரிக்க வைப்பதற்கும் கமலும் பகத் பாசிலும் டான்ஸ் ஆடுவார்கள் என்று தற்போது தகவல் வெளிவந்துள்ளது. ஷூட்டிங் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது குழந்தை திரும்பிப் பார்க்க வேண்டும் என்றால் அந்த இடத்தில் கமல் நின்று கையசைப்பார், டான்ஸ் ஆடுவார், குழந்தைக்கு பிடித்த பாடல்களைப் பாடுவார் என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர். விக்ரம் என்று கூப்பிட்டவுடன் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு கமலுடன் இந்த குழந்தை ஒன்றிவிட்டதாகவும் கூறியுள்ளனர்.

குழந்தையை எப்படி நடிக்க வைக்க வேண்டும் என்று கமலுக்கு நன்றாகவே தெரியும் என்று கூறியுள்ளனர். கமல் மேல் சாய்ந்து பால் குடிப்பதும், தூங்குவதும் என்று பல முக்கியமான காட்சிகள் படத்தில் உண்டு. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் குட்டி குழந்தையை எப்படி நடிக்க வைத்திருப்பார்கள் என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், அந்த குட்டி குழந்தையின் நடிப்புக்கும் விதை போட்டுள்ளார் கமல் என்ற தகவல் அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement