• Jan 15 2025

அனிருத் - ஸ்ருதிஹாசன் கூட்டணியில் கோட் படத்தின் நாலாவது சிங்கிள்! வெளியான அதகள அப்டேட்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

இளைய தளபதி விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்திலிருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகி பெரிதாக வரவேற்பு பெறாத நிலையில், தற்போது நாலாவது சிங்கிள் பாடல் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தில், பிரபுதேவா, அஜ்மல், பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றார்கள்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வருகின்றார். பொதுவாகவே விஜயின் திரைப்படங்களில் இருந்து வெளியாகும் பாடல்கள் பெரிய அளவில் ஹிட் அடிக்கும். ஆனால் கோட் திரைப்படத்திலிருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியான போதும் அவை கலவையான விமர்சனங்களை தான் குவித்திருந்தது. குறித்த பாடல்கள்  ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல்  ஏமாற்றத்தில் ஆழ்த்தியதாக கூறப்பட்டது.


ஆனாலும் கோட் திரைப்படத்திலிருந்து வெளியான ட்டெய்லர் ஏகப்பட்ட  சர்ப்ரைஸ்களை உள்ளடக்கி இருந்தது. இது மட்டுமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் அமைந்துள்ளதாக காணப்பட்டது. இப்படத்தில் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடக்காது என கூறப்படுகின்றது.

இந்த நிலையில், தற்போது கோட் திரைப்படத்திலிருந்து நான்காவது சிங்கிள் பாடலை வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 30 அல்லது 31ம் தேதி இந்த பாடல் வெளியாகும் என கூறப்படுகின்றது.

இந்த பாடலில் நடிகை திரிஷா இடம்பெற்ற பாடலாக இருக்கும் எனவும், இந்த பாடலை அனிருத் மற்றும் ஸ்ருதிஹாசன் பாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியாகி அதிருப்தி ஏற்படுத்திய நிலையில், இந்தப் பாடலாவது ஹிட் கொடுக்குமா என்பதை படக் குழுவினர் எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement