• Apr 28 2024

தமன்னாவின் காவாலயா பாடலில் நானா?- ஆச்சரியப்பட்டு சிம்ரன் வெளியிட்ட வீடியோ- இந்த மேஜிக் நல்லா இருக்கே

stella / 9 months ago

Advertisement

Listen News!

நடிகர் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், சுனில் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள ஜெயிலர் படம் அடுத்தமாதம் 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.இந்தப் படத்தில் ஜெயிலராக ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

ஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்ணாத்த படத்தை தொடர்ந்து இந்தப் படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார்.


கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் முதல் சிங்கிள் வெளியானது. காவாலயா என்ற இந்தப் பாடலில் தமன்னா மற்றும் ரஜினிகாந்த் இணைந்து ஆட்டம் போட்டிருந்தனர். இந்தப் பாடல் சர்வதேச அளவில் பல்வேறு தரப்பினரையும் கவர்ந்துள்ளது. 

நடிகை சிம்ரன் 90களில் கோலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்தவர். அவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்ட அவர் தற்போது குணச்சித்திர ரோல்களில் மட்டுமே நடித்து வருகிறார்.மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் அவர் தனது போட்டோக்கள வெளியிட்டு வருகிறார். 


47 வயதிலும் இப்படி இருக்கிறாரே என ரசிகர்கள் வியப்புடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.இந்நிலையில் ரசிகர் ஒருவர் தமன்னாவின் காவாலயா பாடல் டான்ஸ் வீடியோவை AI மூலமாக எடிட் செய்து அதில் சிம்ரன் ஆடுவது போல வீடியோ வெளியிட்டு இருக்கிறார்."AI மூலமாக நடந்த மேஜிக் இது" என அவர் இன்ஸ்டாக்ராமில் குறிப்பிட்டு ஷேர் செய்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 



Advertisement

Advertisement

Advertisement