• May 02 2024

என்ன ஒரு மூமன்ட் எப்பவும் மறக்கமுடியாது- ஆசையாய் கேக் ஊட்டிய பிரபலம் - செம குஷியில் இருக்கும் சாண்டி மாஸ்டர்

stella / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடன கலைஞர்கள் இப்போது பெரிய ரீச் பெறுகின்றனர். அதற்கு முன்பெல்லாம் நடன கலைஞர்கள் பற்றி மக்களுக்கு தெரியாது.இப்போது எந்த பாடலுக்கு யார் நடன இயக்குநர் என்ற விவரம் எல்லாம் நன்றாக தெரிந்துவிடுகிறது. அப்படி சில பாடல்களே படங்களில் இயக்கியது மூலம் மக்களிடம் பிரபலமானவர் சாண்டி.

இவர் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இயக்கியுள்ளார்.இதனை அடுத்து தற்பொழுது திரைப்படங்களுக்கு நடன ஆசிரியராக பணி புரிந்து வருகின்றார். அண்மையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகிய விக்ரம் படத்திற்கு கூட நடன ஆசிரியராக பணிபுரிந்தார்.


இது தவிர விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.இது தவிர ஹரிஸ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள எல்ஜிஎம் திரைப்படத்திற்கு நடன ஆசிரியராக பணியாற்றுகின்றார்.


இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதற்கு இப்படத்தின் தயாரிப்பாளரான டோனியும் கலந்து கொண்டார்.அப்போது டோனி சாண்டிக்கு கேக் ஊட்டியுள்ளார். இந்தப் புகைப்படத்தை சாண்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement