தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக பல தசாப்தங்களாக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சினிமா வரலாற்றில் ஒரு தனி அத்தியாயமாக கருதப்படும் அவரது பயணம், சாதாரண மனிதனிலிருந்து சூப்பர் ஸ்டாராக உயர்ந்த ஒரு அற்புதமான கதை.

கிட்டத்தட்ட 170-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ரஜினி, தனது உழைப்பின் மூலம் பொருளாதார ரீதியாகவும், புகழ் ரீதியாகவும் உச்சத்தை எட்டியுள்ளார்.
ரஜினியின் வெற்றி, அவரது நடிப்பு திறமை மட்டுமல்ல; அவரது எளிமை, ஆன்மீக நம்பிக்கை, வாழ்க்கை தத்துவம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாகும். அவரது திரைப்பயணம் மூலமாக, “நான்கு தலைமுறைகள் உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு செல்வம் சேர்த்தவர்” என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் ஒரு கேள்வி எழுந்துள்ளது. அதாவது, “ரஜினி இத்தனை ஆண்டுகள் சினிமாவில் நடித்து பெரும் வருமானம் ஈட்டியுள்ளார். ஆனால் அவரது ரசிகர்களில் பெரும்பாலானோர் ஆட்டோ ஓட்டுநர்கள், கூலி தொழிலாளர்கள் போன்ற எளிய வாழ்க்கை வாழ்பவர்கள். அவர்களுக்காக அவர் தனது ஒரு படத்தின் சம்பளத்தைப் பிரித்து கொடுத்து, அவர்களின் வாழ்க்கையை முன்னேற்ற உதவ முடியாதா?” என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பிரபல சினிமா விமர்சகரும், கருத்தாளருமான வலைப்பேச்சு அந்தணன் தனது கருத்தைத் தெளிவாக முன்வைத்துள்ளார்.
அதாவது, “அப்படி கேட்பதற்கு யாருக்குமே உரிமை இல்லை. ஒரு நடிகர் உழைத்து சம்பாதிப்பது, அவருடைய தேவைக்காகத் தான். அவர் சம்பாதித்த பணத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது முழுக்க முழுக்க அவருடைய தனிப்பட்ட விஷயம்.” என்று கூறியுள்ளார் அந்தணன்.
அவர் மேலும், “மனிதாபிமான அடிப்படையில் வேணும் என்றால் உதவலாம். ஆனால் அதைக் கட்டாயப்படுத்துவது தவறு. அத்துடன் ஏற்கனவே அவர் ஒரு பவுண்டேஷன் ஆரம்பித்து, அதன் மூலம் பல உதவிகளை செய்து வருகிறார்.” எனவும் கூறியிருந்தார்.
Listen News!