• Nov 02 2024

'கடவுளை அஜித்தே...' தல பேன்ஸுக்கு தரமாக விழுந்த செருப்படி.? தவெக மாநாட்டில் நடந்தது?

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது மாநில மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் திகதி விசாலை கிராமத்தில் உள்ள விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி தலைவரான விஜய், இந்த மாநில மாநாட்டை சிறப்பாக நடத்தி இருந்தார்.

கோலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக காணப்படும் நடிகர் தான் விஜய். இவர் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக காணப்படுவது மட்டுமில்லாமல், இயக்குனர் தயாரிப்பாளர்களால் அதிக சம்பளம் கொடுத்தும் விலை போகாத நடிகராக காணப்படுகின்றார்.

d_i_a

அதாவது சினிமா பிரபலமாக காணப்படும் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் காணப்படுகின்றனர். இவரை வைத்து படம் இயக்கினால் லாபம் சம்பாதிக்கலாம் என்ற நோக்கில் பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தயாராக உள்ளனர். ஆனாலும் விஜய் தனது 69 ஆவது படத்துடன் சினிமாக்கு முற்றுப்புள்ளி வைத்து அரசியலில் பயணிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.


அதன்படியே தற்போது தனது 69 ஆவது படமான எச், வினோத் இயக்கும் படத்தில் நடித்து வரும் விஜய், இந்த படத்துடன் சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுத்துள்ளார். அதன் பின்பு மக்களுக்காகவே மக்கள் சேவையாற்றுவதற்காகவே அரசியலில் நுழைந்ததாகவும்  தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாட்டில் விஜய் பேசும் போது 'கடவுளை அஜித்தே.' என்று கூட்டத்திலிருந்து சிலர் கோச்சமிட்டதுபோல பரவும் வீடியோவில் எந்த உண்மையையும் இல்லை என்று தற்போது சரிபார்ப்பு குழு அறிவித்துள்ளது. இந்த தகவல் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement