அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என்ற இரண்டு படங்களில் நடித்துள்ளார். விடாமுயற்சி படத்திற்கு பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் பட ரிலீஸ் தள்ளிப்போனதாக தயாரிப்பு சமீபத்தில் குழு அறிவித்துள்ளது.
இதனால் அஜித் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ள நிலையில் அஜித் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் குட் பேட் அக்லி படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து புதிய தோற்றத்தில் மாறியுள்ளார்.இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் கல்யாண் மாஸ்டர் இந்த படத்தின் பாடல் குறித்த புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது "அஜித் குமார் குட் பேட் அக்லி படத்தில் உள்ள பாடலில் செம ஆட்டம் போட்டுள்ளார். அவரது நடனத்தை கண்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.கண்டிப்பாக இந்த பாடல் அஜித் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட் ஆக அமையும்." என கூறி அஜித் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அப்டேட்டினை வழங்கியுள்ளார்.
Listen News!