• Jan 18 2025

அடுத்த இரண்டு கட்ட படப்பிடிப்பு இந்தியாவில் தான்.. ‘விடாமுயற்சி’ படத்தின் சூப்பர் அப்டேட்..!

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!

அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக வெளிநாட்டில் நடந்து வரும் நிலையில் அடுத்த இரண்டு கட்ட படப்பிடிப்பு இந்தியாவில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்தது. பின்னர் மீண்டும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் அஜர்பைஜானில் நடந்த நிலையில் அதன் பின்னர் பல்கேரியா உள்ளிட்ட நாடுகளிலும் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடந்தது.



இந்த நிலையில் தற்போது ‘விடாமுயற்சி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இந்தியாவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் வட இந்தியாவில் 15 முதல் 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் அதற்கான லொகேஷன் தேடும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது.

அதன் பின்னர் இறுதிக்கட்ட படப்பிடிப்பு 10 நாட்கள் புனே நகரில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகளும் தற்போது செய்யப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் ‘விடாமுயற்சி’ படத்திற்காக இசையமைப்பாளர் அனிருத் 4 பாடல்களை ஏற்கனவே கம்போஸ் செய்து முடித்து விட்டதாகவும் இன்னும் ஒரே ஒரு பாடலை விரைவில் கம்போஸ் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.



‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதத்திற்குள் முழுமையாக முடிந்துவிடும் என்றும் அதன் பிறகு கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

அஜித் ஜோடியாக த்ரிஷா நடிக்கும் இந்த படத்தில் அர்ஜுன், ரெஜினா, ஆரவ், பிரணவ் மோகன்லால் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். நீரவ் ஷா ஒளிப்பதிவில், ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் இந்த படம் வளர்ந்து வருகிறது.

Advertisement

Advertisement