சமீப காலமாக அஜித் நடித்து வரும் திரைப்படங்களின் பெரும்பாலான படப்பிடிப்பு வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளான பல்கேரியா, ஜார்ஜியா, அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகளில் தான் படப்பிடிப்பு நடைபெற்று
வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் தற்போது தான் ஐரோப்பிய நாடுகளில்
தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக படப்பிடிப்பு தாமதமாவதை உணர்ந்த அஜித் அடுத்த படத்தை முழுக்க முழுக்க ஜப்பானில் படமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘குட் பேட் அக்லி’
படத்தின் 90% படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெற இருப்பதாகவும் ஒரு சில காட்சிகளின்
படப்பிடிப்பு மட்டுமே சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அஜித் மூன்று வேடங்களில் நடிக்க இருக்கும் இந்த படத்தில் ஒரு
கேரக்டர் நல்லவராகவும் இரண்டு கேரக்டர் நெகட்டிவ் ஆகவும் இருக்கும் என்று தெரிகிறது. மேலும் இந்த படத்திற்காக ஆறு
பாடல்களை கம்போஸ் செய்ய தேவி ஸ்ரீ பிரசாத்
திட்டமிட்டுள்ளதாகவும் அவர் விரைவில் பாடல்
கம்போஸ் பணியை தொடங்கி விடுவார் என்றும் கூறப்படுகிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் முழுக்க முழுக்க திரைக்கதையை முடிந்து விட்ட நிலையில் அடுத்த கட்டமாக நட்சத்திரங்களை தேர்வு செய்யும் பணியில் இருப்பதாகவும் இதை அடுத்து அவர்
ஜப்பானுக்கு லொகேஷன் பார்க்க செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் பக்கா ப்ரீ பிளானில் இருப்பதை
பார்க்கும் போது ஏற்கனவே அறிவித்தபடி
அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் இந்த படம் ரிலீஸ்
ஆவது உறுதி என்று கூறப்பட்டு வருகிறது.
Listen News!