• Jan 19 2025

நேத்து கூட KKR மேட்ச் பார்க்க வந்தாரே.. ஷாருக்கான் திடீரென மருத்துவமனையில் அனுமதி..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பிறகு சிகிச்சைக்கு பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நேற்று கூட அகமதாபாத்தில் நடந்த கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் முதல் தகுதிப்போட்டியை முழுவதுமாக பார்த்தார் என்பதும் இந்த போட்டியில் அவரது அணி கொல்கத்தா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதை அடுத்து அவர் மகிழ்ச்சி அடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த போட்டியை பார்த்தபின் தனது அணி வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக அவர் வீரர்களின் அறையில் சென்ற போது திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

அவருக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டதாகவும் அதனால் தான் உடல்நல பாதிப்பு என்றும் தற்போது அவர் நன்றாக இருக்கிறார் என்றும் சில மணி நேரத்திற்கு முன்னால் தான் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை அடுத்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், தற்போது அவர் உடல் நலத்துடன் இருக்கிறார் என்பதை அறிந்து நிம்மதி அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு ’பதான்’ ‘ஜவான்’ ’டங்க்கி’ ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த ஷாருக்கான் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் அவரது மகளும் நடிகையாக அறிமுகம் ஆகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement