• Jan 19 2025

உடலிடை மெலிந்து அட்டகாசமான ரொமான்ஸ் லுக்கில் அஜித்! ஷாலினியின் இன்ஸ்டா க்ளிக்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

கோலிவுட் சினிமாவில் டாப் 5 நடிகர்களுள் முக்கியமானவராக காணப்படுபவர் தான் நடிகர் அஜித்குமார். இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகின்றார். குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்து வருகின்றது. இதற்காக தனது குடும்பத்துடன் சென்றுள்ளார் அஜித்.

குட் பேட் அக்லி படத்திற்கான ஷூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட நிலையில் தற்போது வெளிநாட்டில் நடத்தப்பட்டு வருகின்றது. இதை ஒட்டி அஜித்தின் அதிரடியான புகைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இன்னொரு பக்கம் ஷாலினி தனது கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றார். வெனிஸ் நகரில் தன்னுடைய மகனுடன் இணைந்து செல்லும்படியான வீடியோவையும் அவர் வெளியிட்டு இருந்தார். அஜித்தின் மகனான ஆத்விக் கால்பந்தாட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றார். அங்கேயும் தன்னுடைய ஆர்வத்தை வீடியோ மூலம் வெளிப்படுத்தி இருந்தார்.


அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில் இந்தப் படம் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக கூறப்படுகின்றது. அதேபோல குட் பேட் அக்லி படத்தின் படமும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதுவும் 2025 ஆம் ஆண்டு பொங்கல் கொண்டாட்டமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில், அஜித்துடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து உள்ளார் ஷாலினி. மேலும் அதில் ஜஸ்ட் லவ் ஜஸ்ட் அஸ் என்ற கேப்ஷனுடன் பகிர்ந்து உள்ளார். இவர்கள் இப்போதுதான் காதல் தேசத்திற்குள் புகுந்த புதிய காதலர்கள் போலவே காணப்படுகின்றார்கள். இந்தப் புகைப்படம் ஏராளமான லைக்குகளை குவித்து வருகின்றது.

Advertisement

Advertisement