• Jan 19 2025

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிச்சும் வெறும் 6 லட்சம் தானா? இந்தியில் மரண அடி

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று கலெக்ஷனை அள்ளி இருந்தது. இதன் காரணத்தினால் சூப்பர் ஸ்டாரை வைத்து கல்லா கட்டிவிடலாம் என்ற நினைப்பில் லைகா நிறுவனம் வேட்டையன் படத்தை தயாரித்தது.

வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ராணா டகுபதி, அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.  மனசிலாயோ பாடல் பட்டித்தொட்டி எங்கும் பேமஸ் ஆனது. அதில் ரஜினிகாந்த்தின் நடனமும் மஞ்சுவாரியரின் நடனமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த நிலையில், வேட்டையன் திரைப்படம் முதல் நாளில் வெறும்  ஆறு லட்சம் ரூபாய் தான் இந்தியில் வசூல் செய்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதனால் அமிதா பச்சனுக்கு ஏழு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்ததற்கு பதிலாக பொன்வண்ணன் அல்லது நாசரையே  அந்த கேரக்டரில் நடிக்க வைத்திருக்கலாம் என்று பங்கமாக கலாய்த்து வருகின்றார்கள்.

அத்துடன் கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மூன்று கோடி ரூபாய் வரை தான் வேட்டையன் படம் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இனிவரும் நாட்கள் விடுமுறை நாட்கள் என்ற காரணத்தினால் வேட்டையன் படத்தின் வசூல் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement